வித்யாலய  நிறுவன நாள் கொடியேற்றம் :

பிப்ரவரி 03 ஆம் தேதியன்று, 95 ஆவது ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய நிறுவன நாளினை முன்னிட்டு, காலை புத்தர் மைதானத்தில் வித்யாலயக் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வித்யாலய கல்வி நிறுவனங்களின் செயலர் சுவாமி கரிஷ்டானந்தர் தலைமை வகித்தார். ராமகிருஷ்ண மடத்தின் மூத்த துறவி சுவாமி தன்மயானந்தர்  அவர்கள் கலந்து கொண்டு வித்யாலயக் கொடியினை ஏற்றி வைத்தார். இதில் சாதுப் பெருமக்கள், நிறுவன தலைவர்கள், மாணவர்கள் என கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.