ஜூலை 15ஆம் தேதியன்று கல்வி வளர்ச்சி நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பள்ளிச் செயலர் சுவாமி தமோஹரானந்தர் விழாவிற்கு தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை மற்றும் அறிவியல் கல்லூரிச் செயலர் சுவாமி அனபேக்ஷானந்தர் அவர்கள் கலந்துகொண்டார். கல்வி வளர்ச்சி நாளையொட்டி நடத்தப்பட்ட கட்டுரை, ஓவியம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சுவாமி அனபேக்ஷானந்தர் மற்றும் பள்ளிச் செயலர் சுவாமிஜி அவர்கள் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தனர்.