அக்டோபர் 11 ஆம் தேதி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு திரு. ராஜவேல் அவர்கள் தன்னம்பிக்கையின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
செப்டம்பர் 05 ஆம் தேதியன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரிய அண்ணாக்களுக்கு கையுந்து போட்டி நடைபெற்றது.
ஆகஸ்ட் 30 ஆம் தேதியன்று ஜி.கே.டி கலையரங்கத்தில் நடைபெற்ற IVT பரிசளிப்பு விழாவில் சதுரங்கம், கோ-கோ போட்டிகளில் முதலிடமும், கையுந்து பந்து, தடகளப் போட்டிகளில் இரண்டாமிடமும் பெற்ற உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வித்யாலய செயலர் சுவாமிஜி அவர்கள் சான்றிதழ்கள் மற்றும் சுழற்கோப்பைகளை வழங்கினார்.