முகிழ்க்கும் மலர்கள் மற்றும் விளையாட்டு விழா

  • டிசம்பர் 24ம் தேதியன்று நமது பள்ளியில் முகிழ்க்கும் மலர்கள் மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. மூத்த துறவி சுவாமி சர்வரூபானந்தர் தலைமை தாங்கினார். இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக எஸ். எம் மருத்துவமனையின் தலைவர் மற்றும் ENT சிறப்பு மருத்துவர் கே. மூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு, சிறப்பு சொற்பொழிவாற்றி, மாணவர்களுக்குப் பரிசு வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் அம்பாடி, கண்ணனுன்னி, முரளீதரா போன்ற நடன நிகழ்ச்சிகளை வழங்கினர்.
  • விளையாட்டு விழாவில் சூர்ய நமஸ்காரம், கொடிப்பயிற்சி, உருளைக்கட்டைப் பயிற்சி, வான்ஸ் பயிற்சி, ஜிம்னாஸ்டிக், ரிதமிக் யோகா, சிலம்பம், பிரமிட், பேண்ட் டிஸ்பிளே, போன்றவை மாணவர்களால் செய்து காண்பிக்கப்பட்டன. பெற்றோர்கள் 200 பேர் இவ்விளையாட்டு விழாவை கண்டுகளித்தனர்.